நுவரெலியா மாவட்டத்தில் உலக முடிவு எனப்படும் இடமான டயகம ஹோட்டன் சமவெளி பகுதியை அண்மித்த தேயிலை தோட்டப்பகுதியில் இறந்த நிலையில் சிறுத்தையொன்று நேற்று மாலை நுவரெலியா வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 3 வயது நிரம்பிய இந்த சிறுத்தை 2.5 அடி உயரமும் 4 அடி நீளமும் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த தோட்டப்பகுதியில் வேட்டையாட வைத்திருந்த கம்பியில் சிக்குண்டு மேற்படி சிறுத்தை உயிரிழந்துள்ளதாகவும் சிறுத்தையை நுவரெலியா பகுதியில் உள்ள வன ஜீவ காரியாலயத்திற்கு ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் டயகம பொலிஸார் தெரிவித்தனர்.