வசந்த மெண்டிஸ் எனப்­படும் பிர­பல ஹெரோயின் கடத்தல் மன்னன், தாய்­லாந்தின் பேங்கொக் நகரில் வைத்து அந் நாட்டு பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

நீர்­கொ­ழும்பு நீதிவான் நீதி­மன்­றத்­தினால், 2013 ஆம் ஆண்டில் குறித்த நப­ருக்கு எதி­ராக ''சிவப்பு அறி­வித்தல்'' பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே நேற்று அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் கடந்த வருடம் கைது செய்­யப்­பட்ட லைபீ­ரிய பிர­ஜையின் மூலம், வசந்த மெண்டிஸ் எனப்­படும் பிர­பல போதைப்­பொருள் கடத்­தல்­காரர் தொடர்­பான தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. குறித்த லைபீ­ரிய பிரஜை இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்­கான கட­வுச்­சீட்டைப் பயன்­ப­டுத்தி இலங்­கைக்குள் பிர­வே­சிப்­ப­தற்கு முயற்­சித்­தி­ருந்தார். 30 கிலோ­கிராம் ஹெரோ­யி­னுடன் கைது செய்­யப்­பட்ட அவர் தற்­போது நீர்­கொ­ழும்பு சிறைச்­சா­லை யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.

இந் நிலை­யி­லேயே வசந்த மெண்­டிைஸ கைதுசெய்ய சர்­வ­தேச பொலி­ஸாரின் உதவி நாடப்­பட்­டது.