"வீதிகளில் மிளகாய்ததூள் வீசி, கத்தியை காட்டி கொள்ளையடித்தவர்களே பாராளுமன்றத்திலுள்ளனர்"

Published By: Digital Desk 4

17 Nov, 2018 | 05:10 PM
image

வீதிகளில் நின்று மிளகாய்தூள் வீசி நகைகளை அறுத்தவர்களும், கத்தியை காட்டி கொள்ளையடித்தவர்களும் பாராளுமன்றம் போனமையினால்தான் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுகின்றது என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இன்றையதினம் சிதம்பரபுரம் பழனிநகரில் சனசமூக நிலையத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கருத்துரைத்தார்.  

அவர் மேலும் கருத்துரைக்கையில்,  

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை முழுநாட்டையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்துள்ளது. ஐனாதிபதி  தூர நோக்கில்லாமல், அரசியலமைப்பை மீறி மேற்கொண்ட செயற்பாடுகளால் பாராளுமன்றில் இன்று மிளகாய்தூள் வீசும் நிலமை ஏற்பட்டுள்ளது. 

சபாநாயகரின் கதிரையை தூக்கிகொண்டு ஓடுகிறார்கள். மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றிற்கு சென்ற உறுப்பினர்கள் சபாநாயகரின்  கதிரைக்கு மேலே தண்ணீரை ஊற்றிவிட்டு சபாநாயகர் பயத்தினால் சிறு நீர் கழித்து விட்டார் என்று சொல்வோம் என்று கூறுகிறார்கள். இன்னுமொருவர் கத்தியோடு நிற்கிறார், கதிரையால் தூக்கி அடிக்கிறார்கள் பொலிஸார் கூட காயமடைந்துள்ளனர். இன்று பாராளுமன்றத்தின் நிலமை இப்படியிருக்கிறது. நேற்றைய அமர்வை பார்க்கும் போது மிகவும் அசிங்கமாகவும், வெட்கமாகவும் இருந்தது.

யார் இவர்களை பாராளுமன்றிற்கு அனுப்பியது. வீதிகளில் நின்று மிளகாய்தூள் வீசி நகைகளை அறுத்தவர்களும், கத்தியை காட்டி கொள்ளையடித்தவர்களும் பாராளுமன்றம் போனமையினால்தான் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுகின்றது. மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டினால் என்னமாதிரியான தெருகூத்தெல்லாம் நடக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கிறது. மகிந்தராஜபக்ஷ மக்கள் மீது அக்கறைகொண்டவராக இருந்தால், நாட்டிலே ஐனநாயகம் ஏற்படுவதை விரும்புபவராக இருந்தால் தனக்கு பெரும்பாண்மை காட்டமுடியாது என்பதை உணர்ந்து விலகிக்கொள்ளவேண்டும். அந்த எண்ணம் அவரிற்கில்லை. 

அதுபோல ஐனாதிபதியும் ஒரு முடிவை எடுக்க வேண்டும். எமக்குகிடைக்க வேண்டிய உரிமையை இந்த நாட்டினுடைய அரசியலமைப்பின் மூலம்தான் பெற்றுகொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் நாம் இருக்கிறோம் .அப்படியிருக்கும் போது ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசியலமைப்பையே ஐனாதிபதியும், முன்னாள் ஐனாதிபதியும் சேர்ந்து அப்பட்டமாக மீறும்போது அரசியலமைப்பினூடாக தமிழர்களிற்கு கொடுக்கபடும் உரிமைகள் ஏன் மீறப்படாது என்ற கேள்வி எழுகிறது. 

எனவே தமிழர்கள் அரசியலமைப்பை நம்பாமல் தனிநாட்டு கோரிக்கைக்கு போகவேண்டுமா என்ற கேள்வியை எமக்குமுன்னாலே இந்த அரசாங்கம் கொண்டு வந்து விட்டிருக்கிறது. எனவே ஒரு சிவில்யுத்தம் ஏற்படுவதற்கான சூழலை உருவாக்கியுள்ளதை அவர்கள் உணரவேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01