அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை கைதி கொலை வழக்கு தொடர்பில் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.

அறுவரை கொலை செய்த வழக்கில் மரணதண்டனை விதிக்ப்பட்டிருந்த ஹோக்கந்தர பகுதியைச் சேர்ந்தவரே சிறைச்சாலையினுள் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபர் மரணதண்டனை விதிக்கப்பட்ட மேலும் இரு கைதிகளால் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டார் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோலை வழக்கு தொடர்பான  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றம் சிறைச்சாலைகள் திணைக்களத்தினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.