(நா.தனுஜா)

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு ஜனநாயகத்துக்கு அமைவாக ஜனாதிபதி விரைந்து தீர்க்கப்பட வேண்டும் எனவும், அதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு முன்வருதல் தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான செயற்பாடுகள் மற்றும், பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பிலான இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று  வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெற்ற போதே மேற்கண்ட விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.