சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை தங்க ஆபரணங்களை கடத்திவர முற்பட்ட சிங்கப்பூர் பிரஜையை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். 

சிங்கப்பூரைச் சேர்ந்த 45 வயதான வியாபாரியே   இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர் இன்று காலை சிங்கப்பூலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த  குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரின் பயண பொதியை சோதனையிட்ட போது மறைத்து வைத்திருந்த ஒரு தொகை தங்க ஆபரணங்களை கைப்பற்றியுள்ளனர்.

கை சங்கிலி 229 , கழுத்து மாலை 175,  வைபவங்களுக்கு அணியும் மாலை 88, கை வலயல்கள்  16 உட்பட பதக்கம் 6 ஆகிய தங்க ஆபரணங்களை பயண பொதியிலும் சந்தேக நபர் அணிதிருந்த காற்சட்டை பையிலும் மறைத்து கொண்டு வந்ததை  போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றபட்டதோடு இலங்கை வரலாற்றிலே அதிகமான தொகை இது தான் என தெரிவித்துள்ளனர். 

சுமார் 4கோடியே 30 இலட்சம்  ரூபா பெறுமதியான 7 கிலோ  212 கிராம் நிறைகொண்ட ஒரு தொகை தங்க ஆபரணங்களை குறித்த நபரிடமிருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்டவரை  மேலதிக விசாரணைகளுக்குட்படுத்தியுள்ளதாக  விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.