14 வய­து­ சிறுமியை அவ்­வப்­போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகச் சொல்­லப்­படும் பாட்டன் மற்றும் அச்­சி­று­மியின் சிறிய தந்தை ஆகி­யோரைக் கைது செய்­துள்­ள­தாக முந்தல் பொலிஸார் தெரி­வித்­தனர். 

முந்தல் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கிராமம் ஒன்றில் வசிக்கும் சிறு­மியே இவ்­வாறு துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வ­ராவார்.

தனது வகுப்பில் கல்வி பயிலும் குறித்த மாணவி எந்­நே­ரமும் கவ­லை­யு­டனும்  இருப்­பதை அவ­தா­னித்து வந்த வகுப்பாசிரியை, இது தொடர்பில் பாட­சாலை அதி­ப­ரிடம் தெரி­வித்­துள்ளார். பின்னர் இவ்­வி­டயம் முந்தல் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரி­வி­ன­ருக்குத் தெரி­வித்­த­தை­ய­டுத்து அவர்கள் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் போதே அச்­சி­றுமிக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

தான் வீட்டில் தனி­மையில் இருக்கும் சந்­தர்ப்­பங்­களில் தனது சிறிய தந்தை மற்றும் பாட்டன் ஆகியோர் தன்னை இவ்­வாறு துஷ்­பி­ர­யோ­கத்­திற்குட்­ப­டுத்தி வந்­துள்­ள­தாக சிறுமி பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார். 

இத­ன­டிப்­ப­டையில் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார் குறித்த இரு சந்­தேக நபர்­க­ளையும் கைது செய்­துள்­ளனர்.

பாதிக்­கப்­பட்ட சிறுமி வைத்­திய பரிசோதனைக்காக புத்தளம் வைத்

தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு முந்தல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.