பல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு நிர்வாகத்திடம் வேண்டுகோள் முன்வைத்த ராஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 16 பேருக்கு விதிக்கபட்டுள்ள வகுப்புதடையை ரத்துசெய்யகோரியும்,பல்கலைக்கழகத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர கோரியுமே இப் போராட்டம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு வவுனியா பொதுசந்தைக்கு முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துபோராட்டம் ஒன்றை மேற்கொண்டதுடன் மாலை ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துதெரிவிக்கும் போது. ராஜரட்ட பல்கலைகழகத்தில் நாம் கல்விமற்றும் அடிப்படை வசதிப்பிரச்சினைகளிற்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது. 

அனைத்துமாணவர்களிற்கும் போதியளவு விரிவுரைசெய்வதற்கான கட்டடங்கள் இல்லை. அனைத்து பீடங்களிலும் போதியளவு பேராசிரியர்கள் இல்லை. 

மருத்துவவிரிவுரையாளர்களின் கொடுப்பனவு குறைக்கபட்டதை அடுத்து மருத்துவபீடம் நெருக்கடிக்குள் தள்ளபட்டுள்ளது. 

6 ஆயிரம் மாணவர்களிற்காக  இரண்டு நீர் சுத்திகரிக்கும் இயந்திரங்களே இருக்கிறது.

 4 ஆயிரம் பேருக்கு ஒரேயொரு உணவுசாலையே காணப்படுகின்றது.

தொழில்நுட்ப பீடம் ஆரம்பிக்கபட்டு இரண்டு வருடங்களாகின்ற போதும் அதற்கான கட்டடம்கட்டிமுடிக்கபடவில்லை. 

இவற்றை எல்லாம் நிர்வாகஅதிகாரிகளிடம் கூறினோம் ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. 

பிரச்சினைகளிற்கு தீர்வைகாணாமல் இவற்றைபேசிய மாணவர்களிற்கு வகுப்புதடை விதித்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். 

எனவே கல்வி உரிமை, சுகாதாரஉரிமை என்பன எதிர்காலசந்ததிக்கு கிடைக்க நாம் ஒன்றிணைந்துபோராடவேண்டும். இந்தஆட்சியாளர்கள் கல்வி, சுகாதாரத்தை தனியார் மயப்படுத்துவதற்காகவே கொள்கைகளை உருவாக்குகின்றனர். இன்று மருத்துவம்,கல்வி போன்றன பணம்கொடுத்து பெறவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

 உரிமைக்காக போராடும் எம்மீது பல்வேறு அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றனர். எனவே இந்தபிரதேசத்தில் இருந்தும் ராஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு வருகைதரவுள்ள சகோதர,சகோதரிகள் அனைவரும் சுதந்திர கல்விக்காக போராடுகின்ற எமக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுகொள்வதாக தெரிவித்தனர். 

நாடளாவியரீதியாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்ண உணவில்லை, பருக நீர்இல்லை, விரிவுரைசாலை இல்லை விரிவுரையாளர்கள் இல்லை என்றகோசங்களையும் கூறியவாறு போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள்.