பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவத்தை முழு உலகமும் இன்று அவதானித்துள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டிசில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற அமளிதுமளியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பொன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

குறிப்பாக இன்றைய தினம் இடம்பெற்ற குழப்ப நிலையைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை முன்னோக்கிச் செல்வது கடினமாக சூழல். 

இதேவேளை, இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவத்தை முழு உலகமும் அவதானித்துள்ளது.

அத்துடன் பாராளுமன்றில் பெரும்பான்மை யார் பக்கம் உள்ளது என்பது தற்போது புலனாவதாகவும், கட்சித் தலைவர்களை இன்றைய தினம் மாலை ஜனாதிபதி சந்திப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.