பாராளுமன்ற வரலாற்றில் கரி நாள் - ஹக்கீம் கவலை

Published By: Rajeeban

16 Nov, 2018 | 04:40 PM
image

இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் இன்றைய நாளே கரிநாள் என  முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று மீண்டும் இடம்பெற்ற மோதல்கள் குறித்து செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி உறுப்பினர்கள்,சபாநாயகர் பொலிஸார் மீது இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தாக்குதலிற்கு அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களே காரணம் என ஹக்கீம்  தெரிவித்துள்ளார்.

அவர்கள் சபாநாயகரின் ஆசனத்தை பலவந்தமாக ஆக்கிரமித்தனர் என தெரிவித்துள்ள ஹக்கீம்  சபாநாயகரின் ஆசனத்தில் அவர்களின் உறுப்பினர் ஒருவர் அமர்ந்துகொண்ட சபாநாயகர் தனது ஆசனத்தில் அமர்வதை தடுத்தனர் எனவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் உறுப்பினர்கள் என அழைக்கப்படுபவர்கள் அனைவரிற்கும்  எங்களிற்கு பெரும்பான்மையுள்ளமை தெரிந்திருந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான பிரேரணையை தடுப்பதற்கு அவர்கள் நாடாளுமன்றத்தின் இன்றையை அமர்வை தடுக்க முயன்றனர் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்றத்தில் என்ன நடக்கின்றது என்பதை முழு உலகமும் பார்த்தது எனவும் தெரிவித்துள்ள ஹக்கீம் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை தாக்க முயல்வதையும் அவரை பொலிஸார் பாதுகாக்க முயல்வதையும் அனைவரும் பார்த்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக உரிய முறையில் குரல்வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவோம் உரிய அரசமைப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசமைப்பின் படி அரசாங்கத்திற்குஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதன் பின்னர் அந்த அரசாங்கம் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டதாகிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ள ஹக்கீம் இதன் காரணமாக ராஜபக்ச அரசாங்கம் என அழைக்கப்படுவது இல்லாமல் போய்விட்டது  எனவும் தெரிவித்துள்ளார்.

சபையின் தீர்மானத்தை மதிக்குமாறும் தற்போதுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு பிரதமரையும் அமைச்சரவையையும்  நியமிக்குமாறும் ரவூவ் ஹக்கீம் கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33