மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!

Published By: Daya

16 Nov, 2018 | 03:34 PM
image

கொத்மலை - தவலந்தென்ன பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்தோடு, மற்றுமொருவர் படுங்காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா கம்பளை பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து மாத்தளை சென்ற மோட்டார் சைக்கிள், தவலந்தென்ன, ஹெல்பொட தோட்டம் கடுகித்துல பகுதியில் வீதியை கடக்க முயற்சி செய்த பாதசாரதி மீது இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்களின் முன்சில்லில் சிக்குண்டு படுகாயமடைந்த நிலையில் பாதசாரதி கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹெல்பொட, கடுகித்துல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 65 வயதான அ.சிவநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மோட்டார் வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, அவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என கொத்மலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09