மல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்

Published By: Daya

16 Nov, 2018 | 01:31 PM
image

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு விரைவில் பாராளுமன்றத்தை கூட்டி, தீர்வு காணுமாறு மல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதியிடம் அவசர கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதிக்கு மல்வத்த மகாநாயக்க பீடத்தின் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த மாதம் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டார் அதனை தொடர்ந்து புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். 

தற்போது நாட்டில் சுமுக நிலையில் சிக்கல் நிலையேற்பட்டுள்ளது. இந்நிலையை சீரமைப்பதற்கு பல தரப்புக்களிலிருந்தும் பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக இலங்கை பிரஜைகள் மற்றும் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும் என சர்வதேசம் அழுத்தம் கொடுத்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஏனையவற்றில் பிரச்சினைகள் உருவாகும் நிலையுள்ளது.

சகல தனியார் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிகப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் அசௌகரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

நீங்கள் நாட்டின் முதல் பிரஜை என்ற அடிப்படையில் உடனடியாக சலக அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி நாட்டில் ஒரு சுமுகமான நிலையை ஏற்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறோம் என அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்