இந்தியா, தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணன் போன்று பழகி, இளம்பெண்ணை சீரழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணம் ஆகாத 21 வயது இளம்பெண் புவனா, இவர் புடவை கடையொன்றில் பணியாற்றி வந்துள்ளார். அந்தக் கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் கடை உரிமையாளரின் நண்பனான சின்னப்பா என்பவன் இளம்பெண்ணிடம் அண்ணன் ஸ்தானத்தில் பழகி வந்துள்ளார்.

இளம் பெண்ணும், அந்த நபரிடம் நன்றாக பழகியுள்ளார். இந்நிலையில், தீபாவளி முடிந்து அடுத்தநாள் தனது வீட்டுக்கு அழைத்த சின்னப்பாவிடம் வர மறுத்துள்ளார் புவனா.

அந்நிலையில், "நீ வரலைன்னா எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வரும். இது முக்கியமான விருந்து நிச்சயம் வரணும்னு" என சின்னப்பா கூறவே, புவனாவும் அதை நம்பி அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இருந்திருக்கவில்லை. வீட்டிலுள்ளவர்கள் எங்கே என கேட்டபோது, அனைவரும் கோயிலுக்கு சென்றுள்ளதாகவும், சற்று நேரத்தில் திரும்பிவந்து விடுவார்கள் எனவும் கூறியிருக்கிறார் சின்னப்பா.

பின்னர் வீட்டிற்கு வந்த புவனாவிற்கு ஆப்பிள் பழத்தையும், குளிர்பானத்தையும் குடிக்கச்செய்துள்ளார். பின் சின்னப்பா கொடுத்த குளிர்பானத்தை குடித்ததும் மயங்கியதாகக் கூறப்படுகிறது.

சில மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்த இளம்பெண்ணுக்கு உடல் முழுவதும் வலி ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு வந்தபோது அதிக அளவில் உதிரப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால், வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை செய்ததில், இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் சின்னப்பாவை கும்பகோணம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலைய பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், புவனாவின் தந்தை கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் தான் மரணமாகியிருக்கிறார். இந்நிலையில் தனது தாயின் சுமையை குறைப்பதற்காகவே தான் வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றியதாக புவனா, பொலிஸாரிடம் கூறி கதறியிருக்கிறாள்.