கடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை தீவுகள் மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள கடல் பகுதிகளில் இருந்த நீர் உள்வாங்கியதால் குறித்த பகுதியில் மக்கள் பதற்றமடைந்திருந்தனர்.இந்நிலையில் குறித்த சம்பவம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது,கஜா புயலின் தாக்கத்தால் குறித்த சில பகுதிகளில் உள்ள கடல்நீர் உள்வாங்கியதாகவும் அது பின்னர் அந்த நிலைமை வழமைக்கு திரும்புவதாகவும் இதனால் எவ்வித விளைவுகளோ அல்லது ஆபத்துக்களே இல்லையெனவும் பொதுமக்கள் இதுகுறித்த பெரிதுபடுத்திக்கொள்ள தேவையில்லையெனவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.