நான்  தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவரல்ல ரவி சாஸ்திரி என இந்திய அணியின் தலைவர் விராட்கோலி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு இந்திய அணியினர் பயணமாவதற்கு முன்னர் விராட்கோலி இதனை தெரிவித்துள்ளார்.

நீங்கள் சொல்வதெற்கெல்லாம் ரவிசாஸ்திரி தலையாட்டுவாரா என நிருபர் ஒருவர் விராட்கோலியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள விராட்கோலி நான் கேள்விப்பட்டதிலேயே மிகவும் வேடிக்கையான விடயம் இதுதான் என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் நான் தெரிவித்த பல விடயங்களை அதிகம் நிராகரித்தவர்  பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரிதான் என விராட்கோலி குறிப்பிட்டுள்ளார்.

நான் நேர்மையான கருத்தொன்றை பெறக்கூடிய நபர் ரவிசாஸ்திரி என தெரிவித்துள்ள விராட்கோலி  ஒரு விடயத்தை செய்யக்கூடாது என்றால் அவர் அதனை செய்யவேண்டாம் என தெரிவிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் வேறு யாரை விடவும் ரவிசாஸ்திரியை செவிமடுத்தே எனது விளையாட்டில் அதிக மாற்றங்களை மேற்கொண்டுள்ளேன் என கோலி தெரிவித்துள்ளார்.

இந்த அணியை நாங்கள் மீளகட்டியெழுப்ப ஆரம்பித்த பின்னர் ரவிசாஸ்திரி பல வீரர்களிற்கு அவர்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் என விராட்கோலி குறிப்பிட்டுள்ளார்.

 2014 இங்கிலாந்;து தொடரிலிருந்து மீண்டு நான் மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கும் சிகார் தவான் மீண்டும் சிறப்பான நிலைக்கு திரும்புவதற்கும் சாஸ்திரியே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீரர்களை முகாமைத்துவம் செய்வதே மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ள விராட்கோலி ரவிசாஸ்திரி அதனை சிறப்பாக கையாண்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.