முத்தரிப்புத்துறை மீனவர்கள் கவலை !

Published By: Vishnu

16 Nov, 2018 | 10:29 AM
image

எண்ணெய் விலையேற்றம் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல்கள்  இவற்றுக்கிடையில் சிரமங்களை எதிர்கொண்டு  மீன்களை கொள்வனவு செய்யும் முதலாளிகள் ஆகக் குறைந்த விலைக்கே தமது கடல் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதாக முத்தரிப்புத்துறை மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த விடையம் தொடர்பாக முத்தரிப்புத்துறை மீனவர்கள் தெரிவிக்கையில்,

சில முதலாளிமார்கள் தொழிலாளிகளுக்கு கடன் கொடுத்துள்ளார்கள். படகு, இயந்திரம், வலைகள் எடுத்து கொடுத்துள்ளார்கள்.

நாங்கள் பிடிக்கும் மீன்களை அவர்களுக்கே கொடுக்க வேண்டும். 

எங்களிடம் மிக குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து வெளியிடத்து வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்று இலாபம் சம்பாதிக்கின்றார்கள்.

மிகவும் சிரமங்களை எதிர்கொண்டு உழைக்கும் நாங்கள் கடனாளிகளாகவும் கூலிக்காரர்களாகவும் மட்டுமே இருக்கின்றோம் என்று மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

ஏற்கனவே இந்திய மீனவர்களினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இன்னமும் தீர்வு இல்லாத நிலையில் இதற்கு எங்கே திர்வு கிடைக்கப்போகின்றது என தெரிவித்தனர்.

முத்தரிப்புத்துறை மீனவர்களின் பிரச்சினை குறித்து மன்னார் மாவட்ட கடற்தொழில்,நீரியல் வளத்துறை  அதிகாரி பவநிதியிடம் வினவிய போது,

சில மீன்பிடி கிராமங்களில் உள்ள முதலாளிகள் தொழிலாளிகளுக்கு மீன்பிடி படகுகள் வலைகள் இயந்திரங்களை கடனாக எடுத்து கொடுத்து தொழிலாளிகளை  அடிமைகளாக்கி வைத்து முதலாளிகள் சொல்வது தான் விலை எனும் நிலையில் உள்ளது. 

இவற்றை தீர்க்கும் வகையில் எம்மால் ஏற்படுத்தப்பட்ட மீனவ கூட்டுவு சங்கங்களுடன் இணைந்து மீனவர்கள் செயற்படுவதன் மூலம்  முதலாளிகளிடம் வேண்டிய கடன்களை கட்டி முடிக்க முடியும்.

அதன் பின் அவர்கள் பிடிக்கும் மீன்களை கூட்டுறவு சங்கங்களினூடாக அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும்.

இப்படி நாம் எடுத்த முயற்சிகள் அனைத்து தோல்வி கண்டதால் இப்படியான முதலாளிகளின் வலையமைப்பை உடைக்க முடியாதுள்ளது. இதற்கான மாற்று வழியை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55