சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த  ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 165 ஆவது படம் பேட்ட. இதில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், நவாசூதின் சித்திக். பொபி சிம்ஹா, சனத் ரெட்டி, முனிஷ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். எஸ் திருவாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்திருக்கிறார்.

நவம்பரில் ரஜினி நடித்துள்ள 2 பொயிண்ட் ஓ வெளியாகவிருக்கும் நிலையில் தலைவரின் அடுத்தப்படமான பேட்ட குறுகிய இடைவெளியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இப்படத்தின் டீஸர் மற்றும் சிங்கிள் ட்ராக் நத்தார் தினம், ஆங்கில புத்தாண்டு தினங்களில் வெளியாகவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.