வவுனியா பட்டக்காடு குளத்திற்கு இன்று பிற்பகல் குளிக்க சிறுவர்களுடன் சென்ற திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

இன்று பிற்பகல் 4 மணியளவில் திருநாவற்குளம் பகுதியிலிருந்து அருகிலுள்ள பட்டக்காட்டு குளத்தில் குளிப்பதற்காக சிறுவர்களுடன் சென்று குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது குறித்த சிறுவன் தண்ணீரின் ஆழத்திற்குச் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து ஏனைய சிறுவர்கள் திருநாவற்குளம் பகுதியில் நின்ற இளைஞர்களுக்கு நடந்த விடயங்களை தெரியப்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில் இளைஞர்கள் குளத்திற்குள் சென்று நீரின் அடிமட்டத்திலிருந்த குறித்த சுரேஸ்குமார் றொசான் என்ற 14 வயதுடைய சிறுவனை 15நிமிடங்கள் போராட்டத்தின் பின்னர் மீட்டு வைத்தியசாலைக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் வைத்தியர்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது எடுத்துவரும் வழியில் குறித்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வைத்தியசாலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.