அடுத்த மாதம் கருணாநிதியின் உருவ சிலை திறப்பு

Published By: Digital Desk 4

15 Nov, 2018 | 05:24 PM
image

மறைந்த தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை டிசம்பர் 16 ஆம் திகதியன்று திறக்கப்படும் என அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

“ மறைந்த தலைவர் கருணாநிதியின் முழு உருவச் சிலையை வருகின்ற அடுத்த மாதம் 16 ஆம் திகதியன்று அகிய இந்திய தலைவர்கள் பங்குபற்றி சிறப்பாக திறந்து வைக்கவிருக்கிறார்கள்.

 ஐந்து முறை முதல்வராக இருந்து தமிழகத்திற்கு எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றித்  தமிழகத்துக்கு மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உன்னதமாக கொலுவீற்றிருக்கும் தலைவரின் உருவச் சிலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் நிறுவப்படவுள்ளது.

இந்த சிலையுடன் புனரமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் சிலையையும் ஒரேயிடத்தில் அருகருகே அமையவிருக்கின்றன. டிசம்பர் 16 ஆம் திகதி தலைவரின் முழு உருவச்சிலை திறப்பு விழா எழுச்சி மிகு விழாவாக நடைபெறும்.’ என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே கருணாநிதியின் முழு உருவச்சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திருமதி சோனியா காந்தி திறந்துவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47