BLUE OCEANகுழுமத்தின் முன்னோக்கிய பயணத்தில் மேலும் சில சாதனைகள் 

Published By: R. Kalaichelvan

15 Nov, 2018 | 04:45 PM
image

கட்டட நிர்மாணத்துறையில் இலங்கையில் முதலிடம் வகிக்கும் Blue Ocean Group சர்வதேச ரீதியில் மேலும் பல சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது.

இத்துறையில் உயரிய விருதாகக் கணிக்கப்படும் ஆசியாவின் Property Guru Asia Property Award விருதுக்கு வரலாற்றில் முதன்முறையாக கடந்த வருடம் இலங்கை தெரிவு செய்யப்பட்டது. 

சிங்கப்பூரில் நடந்த அந்நிகழ்வில் இலங்கை கட்டட நிர்மாணத்துறையில் முதலிடத்துக்கான விருதையும் ஆசியாவின் மிகச் சிறந்த வர்த்தக நாமத்துக்கான விருதையும் Blue Ocean குழுமம் பெற்றுக் கொண்டது. 

அதனைத் தொடர்ந்து இவ்வருடம் அதே துறையில் எட்டு உயரிய விருதுகளை இந்நிறுவனம் சுவீகரித்துக் கொண்டமை அந்நிறுவனத்தினது வாழ்நாள் சாதனை என்பதுடன் எமது தாய்நாட்டுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் எனவும் கருதமுடிகின்றது.

தெளிவான தொலைநோக்குடன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் இக்குழுமம் இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகாரத்தைப் பெற்று Blue Ocean என்ற பிரதான வர்த்தக இலச்சினையின் கீழ் பொறியியல், ரியல் எஸ்டேட், பொது வணிகம்,மின்னியல் கூட்டுறவு ஆலோசனைகள்,கல்வி உட்பட பல்வேறு துறைகளில் பிரகாசித்து வருகிறது.

Blue Ocean குழுமம் வடிவமைக்கும் அதிநவீன தொழில்நுட்பத்துடனான குடியிருப்புகள் அழகிய கலையம்சத்துடன் உச்சபட்ச பாதுகாப்புடன்,கௌரவமான, ரோக்கியமான, அமைதியான, நெரிசலற்ற சுற்றுப்புறங்களைக் கொண்டதாக விளங்குவதால் வாடிக்கையாளர்கள் திருப்தியுடனும்,நிம்மதியுடனும் வாழ்வதற்கான உத்தரவாதம் கிடைக்கின்றது. 

அத்துடன்,சட்ட அங்கீகாரம் மற்றும் உள்ளுராட்சி சபைகளின் அனுமதி ஆகியவற்றுடன் சட்டபூர்வ எல்லைகள் வகுக்கப்பட்டு தெளிவான உறுதிப்பத்திரத்துடன் (Clear Title) கையளிக்கப்படுவதால் குடியிருப்பாளர்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித சிக்கல்களும் ஏற்படுவதில்லை. 

அத்துடன் பொறுப்பேற்ற பணியை நேர்த்தியாகவும், தரமாகவும், பொறுப்புணர்வுடனும் ஒப்புக்கொண்ட கால எல்லைக்குள் முடிப்பதில் இந்நிறுவனம் எப்போதுமே தவறுவதில்லை.

Blue Ocean நிறுவனத்தின் மகத்தான வெற்றிக்குப் பிரதான காரணம் வாடிக்கையாளர்களுக்கு கட்டட நிர்மாணம் சம்பந்தமான சகல சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்குவதேயாகும். 

கட்டட வரைபாக்கம்,காணிச்சீரமைப்பு வசதிகள் முகாமைத்துவம் மற்றும் சட்ட ஆலோசனைகள் உட்படசகல தேவைகளும் தாமதமின்றி நேர்த்தியாகவும் நிறைவாகவும் நிறைவேற்றப்படுவதால் வாடிக்கையாளர்களின் சிரமங்கள் முற்றாக நீக்கப்படுகின்றன.

Blue Oceanகுழுமத்தின் தலைவர் திரு. சிவராஜா துமிலன் (ACA, ACCA ,ACMA (UK) ACMA CPA (AUS) FM AAT (SL) ACS) அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கிவரும் முகாமைத்துவக் குழுவில் உயர் கல்வித் தகைமைகளையும் சிறந்த நிபுணத்துவத்தையும் கொண்ட கட்டடக் கலைஞர்கள், பட்டயக் கணக்காளர்கள் பொறியியலாளர்கள், சட்டவல்லுனர்கள் மற்றும் கட்டட நிர்மாணத்துறையில் பாண்டித்தியம் பெற்ற ஏனைய தரப்பினர் அங்கம் வகிப்பது இக்குழுமத்தின் வெற்றிக்கு மற்றுமொரு முக்கிய காரணமாகும்.

ஏற்கனவேகட்டட நிர்மாணத்துறையில் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஸ்திரமாகக் காலடி பதித்துள்ள Blue Ocean குழுமம் அதே துறையில் 43 வருட அனுபவத்துடன் மற்றொரு ஜாம்பவானாகத் திகழும் Link Engineeringநிறுவனத்துடன் ஒன்றிணைந்தது இலங்கை நிர்மாணத்துறை வரலாற்றி;ல் ஒரு முக்கிய திருப்பமாகக் கருதப்படுகின்றது.

Link Engineering நாடளாவிய ரீதியில் 35 பாரிய கட்டுமானத் திட்டங்களை பொறுப்பேற்றுள்ளது. 

அதே சமயம் Blue Ocean 10 முக்கிய நகரங்களில் முன்னெடுக்கும் 32 பாரிய திட்டங்கள் மூலம் ஒரே சமயத்தில் 1250 இல்லங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

இவ்வருடத்தில் மாத்திரம் இக்குழுமம் 55 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள வீடமைப்பு திட்டங்களை பொறுப்பேற்றுள்ளது.

இலங்கை அரசு முன்னெடுக்கும் துரித அபிவிருத்தித் திட்டங்களால் உள்நாட்டு ஆதனங்களின் பெறுமதி துரித கதியில் அதிகரித்துச் செல்கிறது. 

தாராளப்பொருளாதாரக் கொள்கையால் வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. கட்டட நிர்மாணத்துறை முன்னெப்போதும் இல்லாதவாறு துரிதமான வளர்ச்சியைக் கண்டுவருகின்றது. அதற்கேற்ப மக்கள் பாரம்பரிய பண சேமிப்பு முறைகளுக்கு அப்பால் கட்டட நிர்மாணத்தில் தங்கள் பணத்தை முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான நிலை. என்றுமே தளர்ந்துபோகாத சிறந்த முதலீடு என்பது இன்று சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தடம் பதித்தல்:இந்நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் கால் பதித்துள்ளமை அங்குள்ள மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 குறித்த திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியானவுடனேயே நிறுவனத்தாருடன் தொடர்பு கொண்டு தங்களது இல்லங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்வது மக்கள் அவர்கள் மீது கொண்டிருக்கும் ஆணித்தரமான நம்பிக்கைக்கு சான்றாக விளங்குகின்றது.

இம்மாகாணங்களில் இதுவரை நிறைவேற்றியுள்ள திட்டங்களில் குறிப்பிடத்தக்க திட்டங்கள் யாழ்ப்பாணம்: மக்கள் வங்கி பிரதேச அலுவலகம்,யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடம், யாழ் விரிவுரை மண்டபம்,புனித திருக்குடும்ப கன்னியர் பாடசாலை கட்டடம்,நகர அபிவிருத்தி அதிகார சபை பிராந்திய அலுவலகம்ரூபவ் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கட்டடம்,திருகோணமலை ஆதார வைத்தியசாலைக்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு,இலங்கை வங்கி அதியுயர் கிளை, மட்டக்களப்பு புதிய மாவட்ட நிர்வாக அலுவலகம் சர்வதேச வலையமைப்பு சர்வதேச மட்டத்தில் நிறுவன சேவைகளை விஸ்தரிப்பதற்காகவும்,இலங்கையில் கட்டட நிர்மாணத்துறையில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களினதும் மற்றும் அந்நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் வசதிக்காகவும் நிறுவன கிளை அலுவலகங்களை ஐக்கிய ராஜ்ஜியம்,கனடா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் நிறுவியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57
news-image

யாழில் முதல் முறையாக மருந்து வில்லைகள்...

2024-03-11 16:16:39
news-image

KIST தனது சோஸ் வகைகளை புதிய...

2024-03-08 10:44:09
news-image

முன்னேற்றத்தின் பங்காளியாக 135 ஆண்டுகால பெருமை...

2024-03-06 17:32:13
news-image

பிரீமியம் அந்தஸ்தை பெற்றுள்ள Radisson Hotel...

2024-03-04 16:26:08
news-image

பான் ஏசியா வங்கி 2023 நிதியாண்டில்...

2024-02-26 16:45:55
news-image

புரத தினம் 2024: இவ்வருடத்தின் எண்ணக்கரு...

2024-02-26 16:58:38
news-image

Sun Siyam பாசிக்குடாவில் உள்நாட்டவர்களுக்காக விசேட...

2024-02-26 16:58:18