பாதுகாப்பு அமைச்சை தவிர்த்து ஏனைய 30 அமைச்சுக்களுக்கும் விசேட பொலிஸ் அதிரடிப் படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிரடிப் படையின் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவுகின்ற அரசியல் சூழ்நிலையின் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன் பாராளுமன்ற வளாகத்துக்கும் விசேட பொலிஸ் அதிரடிப் படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.