காணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்

Published By: Digital Desk 4

15 Nov, 2018 | 02:19 PM
image

ஏறாவூர் பகுதியில் நேற்று புதன்கிழமை பாடசாலைக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போனதாக பொலிஸில் முறையிடப்பட்டிருந்த சிறுமி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி சவுக்கடி கிராமத்தைச் சேர்ந்த 11 வயதான சிறுமி நேற்றுபுதன்கிழமை பாடசாலைக்குப்  சென்றிருந்த நிலையில் பாடசாலைக்கும் செல்லாது வீட்டுக்கும் திரும்பாது காணாமல் போயிருந்தார் என ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

மயிலம்பாவெளியிலுள்ள பாடசாலையொன்றில் 6ஆம் ஆண்டு கற்கும் குறித்த சிறுமி புதன்கிழமை மாலை வேளையில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மட்டக்களப்பு நகரில் வைத்து உறவினர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

வழமைபோன்று இந்தச் சிறுமி சவுக்கடியிலுள்ள தனது வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு மைலம்பாவெளியிலுள்ள தனது அம்மம்மாவின் வீட்டுக்குச் சென்று அங்கு வைத்து சீருடைகளை மாற்றிக் கொண்டு பாடசாலை செல்வது வழக்கம்.

ஆயினும், நேற்று அவர் பாடசாலை சென்றிருக்கவில்லை என்று பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்தததையடுத்து தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

தான் முன்னதாக தனது வீட்டிலிருந்து  மைலம்பாவெளிக்கும் பின்னர் அங்கிருந்து செங்கலடிக்கும் பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்குச் சென்றதாக சிறுமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40