பிரெக்சிட் உடன்படிக்கையை வெளியிட்டது ஐரோப்பிய யூனியன் 

Published By: R. Kalaichelvan

15 Nov, 2018 | 11:29 AM
image

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்றபொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர்.இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர்  தெரசா மே சமர்ப்பித்த வரவு தொடர்பாக 585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கையை அமைச்சரவையில் ஒப்புதல் அளித்துள்ளது. 

வெளியேற்றத்துக்கு பின்னர் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையினான எதிர்கால நிதி பரிமாற்றம், பாதுகாப்பு, விசா மற்றும் குடியேற்றக் கொள்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 

மேலும், இனி செயல்பாட்டுக்கு வரும் பிரிட்டன் அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பாகவும் தனியாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கையை  ஐரோப்பிய யூனியனும் பிரிட்டன் அரசும்  இன்று கூட்டாக வெளியிட்டுள்ளன.

லண்டன் பாராளுமன்றமும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்த தலைவர்களும் ஒப்புதல் அளித்த பின்னர் இந்த உடன்படிக்கையில் உள்ள அம்சங்கள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 12:56:28
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06