போர்க்களமாக மாறிய பாராளுமன்றம் ! ஆசனத்தைவிட்டு வெளியேறினார் சபாநாயகர் !!

Published By: Vishnu

15 Nov, 2018 | 10:54 AM
image

பாராளுமன்றில் இன்று காலை சபை நடவடிக்கைகள் ஆரம்பமானபோது மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார்.

அந்த உரையில் நேற்யை தினம் அவர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்களிப்பு சபாநாயகரால் குரல் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனால் அவ்வாறான ஒரு நாம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை பிரதமர் மீதும் அரசாங்கத்தின் மீதும் கொண்டு வருவதாக இருந்தால் அதனை வாக்களிப்பின் பெயர் குறிப்பிட்டு மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடும் போது, 

பாராளுமன்றின் சபை நடவடிக்கையின் போது மஹிந்த ராஜபக்ஷ நடாத்திய விஷேட உரையின் பின்னர் லக்ஷ்மன் கிரியெல்ல மஹிந்தவின் உரையில் கூறப்பட்ட விடயங்கள் உண்மையல்ல என்று கூறி இன்றும் மீண்டுமொரு வாய்மூல நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.  இதனைத் தொடர்ந்தே சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி நகர்ந்தனர். அவ் வேளை சபாநாயகரை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்களும் படைக்கல சேவியர்களும் அவ்விடத்தில் குவிந்தனர்.

இதன்போது இரு குழுவினருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்ந்தும் கைகலப்பாக மாறியது. இரத்தமேற்படும் வகையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்றில் தற்போதும் பாராளுமன்றில் குழப்பநிலையேற்பட்டதால் சபாநாயகர் தனது ஆசனத்தைவிட்டு வெளியேறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47