காட்டுத்தீயில் சிக்கி 50 பேர் பலி - அமெரிக்காவில் சம்பவம் 

Published By: Daya

15 Nov, 2018 | 10:15 AM
image

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 

அமெரிக்காவில் 3 இடங்களில் பரவி வருகிற காட்டுத்தீயின் போக்கு தீவிரமாக உள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தெற்கு மற்றும் வடக்கு முனைகளில் இருந்து ஆயிரக்கணக்கான தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருகிறார்கள். 

ஒரு லட்சத்து 25 ஏக்கர் நிலப்பரப்பில் பரவி உள்ள காட்டுத்தீயில் 30 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

 அமெரிக்க காட்டுத்தீ வரலாற்றில் மிக ஆபத்தான காட்டுத்தீ இதுதான் என்றும் கூறப்படுகிறது. தீயணைப்பு பணியில் முழு மூச்சுடன் போராடி வருகிற வீரர்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாகாணம் முழுவதும் இந்த காட்டுத்தீக்கு பலியானவர்கள் எண்ணிக்கை  50 ஆக உயர்ந்துள்ளது. பல நூறு பேர் காணாமல் போய் விட்டனர்.

கேம்ப் தீ என்று சொல்லப்படுகிற பாரடைஸ் நகர பகுதி காட்டுத்தீதான் மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47