கருணாநிதி மறைந்து 100ஆவது நாள் 

Published By: Daya

15 Nov, 2018 | 10:57 AM
image

கருணாநிதி மறைந்து 100ஆவது நாளையொட்டி அவருடைய சமாதியில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்து நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்தது. இதையொட்டி கருணாநிதியின் சமாதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர்கள்  டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி உட்பட தி.மு.க. நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.

 முன்னதாக கருணாநிதி மறைந்து 100ஆவது நாளையொட்டி அவரது சமாதி பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சமாதியின் மீது தனது தாயார் அஞ்சுகம் அம்மையாருடன் கருணாநிதி இருப்பது போன்ற ஓவியம் பூக்களால் உருவாக்கப்பட்டிருந்தது.

சமாதியில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படம் அலங்கார வளைவு போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. முரசொலி நாளிதழ் ‘லேமினேசன்’ செய்யப்பட்டு சமாதியில் வைக்கப்பட்டிருந்தது.

கருணாநிதி சமாதிக்கு நேற்று அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களுக்கு, மு.க.ஸ்டாலினின் சொந்த செலவில் அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு உணவு பொதிகள் மற்றும் குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டன. 

இதற்கிடையில், கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய படத்தை மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் “நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத்தின் பேராசான் தலைவர் கருணாநிதி நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு 100 நாட்கள்! 80 ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வில் தோல்வி ஏற்படினும் துவண்டு போகாமல், வீண்பழி சுமத்திய வீணர்களை ஜனநாயக அறவழியில் விரட்டிய அதே வழியில் நாமும் பயணிக்க உறுதியேற்போம்” என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52