எப்பாவெல கொன்வெவ பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் உள்ள பன்றிப் பண்ணையொன்றில் இருந்து இரண்டு வயோதிபர்களின் சடலங்கள் இன்று  காலை  மீட்கப்பட்டுள்ளன.

60 வயதான அன்தனி திஸாநாயக்க மற்றும் 65 வயதான டேவிட் அத்தே ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கழுத்து சுருக்கிடப்பட்ட நிலையில் ஒருவரும், கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஒருவரும்  மீட்கப்பட்டுள்ளனர்.

கொலைக்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் 

எப்பாவெல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.