கடந்த முப்­பது வரு­ட­ கா­லத்தில் இடம்­பெற்ற யுத்­தத்தில் உயி­ரி­ழந்த உற­வி­னர்கள் நினைவு கூருகின்ற போர்­வையில் மீணடும் புலிகள் உயி­ரூட்­டப்­ப­டு­வதை நாம் ஏற்­கப்­போ­தில்லை என பாரா­ளுன்ற உறுப்­பி­னரும் ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெர­வித் தார்.

அண்­மையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் உற­வு­க­ளுக்கு அஞ்­சலி செய்ய இட­ம­ளிக்­கு­மாறு அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தமை தொடர்பில் கருத்துத் தெரி­வித்த போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், யுத்­தத்தில் கொல்­லப்­பட்ட புலி உறுப்­பி­னர்­க­ளுக்கு அவர்­க­ளது உற­வுகள் அஞ்­சலி செலுத்­து­வ­தற்­கான அனு­ம­தியை அர­சாங்கம் பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்று நேற்று முன்­தினம் இடம்பெற்ற பாரா­ளு­மன்ற அமர்வின் போது வரவு – செலவுத் திட்ட விவா­தத்தை ஆரம்­பித்துவைத்து உரை­யாற்றும் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் கோரிக்­கையை விடுத்தார்.

இதன்­போது நவம்பர் மாதத்தில் வீரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­து­வது உலக வழக்­க­மாக இருந்துவரு­வதன் அடிப்­ப­டையில் போரி­னாலோ அதன் தாக்­கத்­தி­னாலோ உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்தும் உரிமை யாவ­ருக்கும் உண்டு.

நவம்பர் மாதத்­தி­லேயே உயிர்­நீத்த வீரர்­களை நினை­வு­கூர்ந்து அஞ்­சலி செலுத்தி வரு­கின்­றனர். அதனை முன்­னிட்டே பொப்பி மலர் அணியும் வழக்­கமும் வந்­தது. அந்­த­வ­கையில் தான் நானும் பொப்பி மலர் அணிந்து வீரர்­களை நினைவுகூர்ந்து அஞ்­சலி செலுத்­தி­யி­ருந்தேன். இதன்­மூலம் ஒவ்­வொரு போராளி அல்­லது வீரரும் நினைவு கூரப்­பட வேண்டும்.

சிங்­க­ள­வர்கள், தமி­ழர்கள், முஸ்­லிம்கள் என்­றல்­லாது நினை­வு­கூரல் என்­பது சக­ல­ருக்கும் சம­மா­ன­தாக இருக்க வேண்டும். நான் ஆழி­ய­வளை மற்றும் உடுத்­துறை ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு சென்­றி­ருந்தேன். அங்கு மாவீரர் துயிலும் இல்­லங்கள் புல்­டோ­சர்கள் மூலம் அழிக்­கப்­பட்­டுள்­ளன. அவ்­வி­டங்கள் தற்­போது தென்­னந்­தோப்­பு­க்க­ளாக மாறி­யுள்­ளன.

நவம்பர் மாதத்தில் இறந்த ஆத்­மாக்கள் நினை­வு­கூ­ரப்­ப­டு­கின்ற நிலையில் மேற்­படி ஆழி­ய­வளை மற்றும் உடுத்­துறை பிர­தே­சங்­களில் குறிப்­பிட்ட ஒரு பகு­தி­யி­ன­ருக்கு தமது இறந்த உற­வு­க­ளுக்கு அஞ்­சலி செலுத்தும் உரிமை இல்­லாது செய்­யப்­பட்­டுள்­ளது. முன்­னைய அர­சாங்­கத்­தினால் அஞ்­சலி நிகழ்­வு­க­ளுக்கு தடைவிதிக்­கப்­பட்­டி­ருந்­ததை நாம் அறிவோம்.

யுத்­தத்தின் போதும் யுத்த கார­ணங்­க­ளி­னா லும் மர­ணித்த உற­வு­க­ளுக்கு அவர்­க­ளது உற­ வுகள் அஞ்­சலி செலுத்­து­வ­தற்கு அர­சாங் கம் அனு­ம­தியை வழங்க வேண்டும் என்ற கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருந்தார். இந்த நிலைப்­பாடு தொடர்பில் எம்­மத்­தியில் எவ்­வித மாற்­றுக் கருத்தும் இல்லை.

இதன் போது ஒருவருக்கு உறவினராக இருக்கும் பட்சத்தில் பிரபாகரனுக்கும் அஞ்சலி செய்ய அனுமதிப்போம். ஆனால் மாவீரர்களுக்கு அஞ்சலி என்ற பேரில் புலிகளுக்கு மீண்டும் உயிரூட்ட எவரும் எதிர்பார்த்திருப்பார்களாயின் அவர்களை நாம் எதிர்ப்போம் என்ற நிலைப்பாட்டிலும் மாற்றம் இல்லை