“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”

Published By: Digital Desk 4

14 Nov, 2018 | 06:08 PM
image

(ரொபட் அன்டனி, எம்.டி. லூசியஸ்) 

பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் நீதிக்கும் புறம்பாகவே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம் ஜனாநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என  அமைச்சரவை பேச்சாளரான  மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறி ஜய சேகர ஆகியோர் தெரிவித்தனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர். 

தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்கள்,

நாட்டில் நிலையான அரசாங்கம், அமைச்சரவை இல்லாமல் இருக்கின்றது. இதுவொரு பாரிய பிரசின்னையே?

அவ்வாறான ஒரு நிலைமை நாட்டில் இல்லை. வர்த்தமானி பிரகாரம் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் இருக்கின்றது. ஜனாதிபதி புதிய பிரதமரை நியமித்தமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி எதிரணியினர் நீதிமன்றம் செல்லவில்லை. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் பாரளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகவே ஐக்கிய தேசியக் கட்சியினர் நீதிமன்றம் சென்றனர்.

ஆனால் இதற்கு இறுதி தீர்ப்பு  உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்படவில்லை. பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அரசியலமைப்பு பிரகாரம் முன்னெடுத்த நடவடிக்கைகளை யாரும் சவாலுக்குட்படுத்த முடியாது.

பாராளுமன்றில் சம்பிரதாயங்கள் மீறப்பட்டுள்ளன

பாராளுமன்றில் இன்று காலை  எதிரணியினர் நடந்துகொண்ட விதம் முற்றிலும் தவறானது. பாராளுமன்ற சம்பிரதாயத்தையும் நீதியையும் குழித்தோண்டி புதைத்துள்ளனர். 

பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அப்பால் நம்பிக்லையில்லா பிரேரணை என ஒன்றை அநுரகுமார எம்.பி. வாசித்தார். பின்னர் ஏதோ ஒரு கடதாசியை விஜிதஹேரத் எம்.பி. பொதுசெயலாளரிடம் ஒப்படைத்தார். சபாநாயகரிடமும் ஒப்படைக்கவில்லை. அதில் என்ன விடயம் இருந்தது என எமக்கும் தெரியாது சபாநாயகருக்கும் தெரியாது. ஆனால் சிறிது நேரத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது என்கிறார்கள்.

கேள்வி: பிரேரணை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே?

இல்லை. ஜனாதிபதிக்கு அறிவிக்கவில்லை. நான் அரை மணித்தியாலங்களுக்கு முன்னர் ஜனாதிபதியுடன் தான் இருந்தேன். அதுவரையில் ஜனாதிபதிக்கு எந்த கடிதமும் கிடைத்திருக்கவில்லை. 122 பேர் கையொப்பத்துடன் சபாநாயகர் ஜனாபதிக்கு கடிதம் அனுப்பயிருப்பதாக கூறுகிறார்கள். அவ்வாறு ஒரு கடிதம் கிடைத்தால் ஜனாதிபதி சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகளை எடுப்பார்.

திருட்டு அரசாங்கம், திருட்டு அமைச்சர்கள் என கூறுகின்றார்களே?

இவை சேறு பூசும் நடவடிக்கைகளாகும். இவ்வாறு கூறி அரசியல் செய்கின்றார்கள். கள்வர்களை பிடிப்பதாக கூறி ஆட்சியமைத்தவர்கள் இன்று அவர்களால் ஆட்சயை கூட தக்கவைத்துக்கொள்ளவில்லை.

உங்களிடம் 113 பெரும்பான்மை இல்லை என்பதால் தானே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது?

இல்லை. பாராளுமன்றம் கலைக்கபட்டமைக்கு ஜனாதிபதி மூன்று காரணங்களை பகிரங்கமாக கூறியிருந்தார். அதனடிப்படையிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

113 பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி செய்ய முடியுமா?

2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிடம் 42 உறுப்பினர்களே இருந்தனர். அப்போது அவர்கள் ஆட்சி செய்யவில்லையா? ஆட்சி செய்வதற்கு எண்ணிக்கை முக்கயமில்லை.

113 நிரூபிக்க முடியாவிட்டால் வீட்டுக்கு செல்வோம் என்று கூறுனீர்களே?

இவ்வாறு கூறுவது வழமையான நிகழ்வு. ஜனாதிபதி இதுதொடர்பில் தீர்மானிப்பார். ஐக்கிய தேசியக் கட்சியிடம் 122 பேர் இருக்கின்றார்கள் என கூறுவது பொய்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய பிரதமருக்கு ஆதரவு வழங்கவில்லை. அவை பாராளுமன்றத்தை கூட்டவே ஆதரவு வழங்கின. எனவே அவர்கள் முற்று முழுதான பொய்யாகும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய மாகாணத்தின் முதலாவது சப்ததள 108...

2024-03-19 10:37:23
news-image

மலையக கட்சிகள் யாருக்கு, எதற்கு ஆதரவளிக்க...

2024-03-19 10:34:04
news-image

சுவீடனின் நேட்டோ உறுப்புரிமை: இந்தோ -...

2024-03-19 09:09:10
news-image

கனடாவிலும் இலங்கையிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய 6...

2024-03-18 14:07:20
news-image

வலுவடையும் இலங்கையின் ரூபாய் : பொதுமக்கள்,...

2024-03-18 13:49:53
news-image

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதியாக பிரபோவோ  

2024-03-18 13:37:22
news-image

மாகாண சபை முறைமை சுயாட்சிக்கான படிக்கல்

2024-03-18 13:31:57
news-image

அமெரிக்க தேர்தல் களம் : ட்ரெம்புக்கு...

2024-03-18 13:23:47
news-image

தேர்தல்கள் மட்டுமே தீர்வுகளை கொண்டுவருமா?

2024-03-18 13:08:50
news-image

வளமான வாழ்வுத் தேடலில் உயிரை இழக்கும்...

2024-03-18 13:05:14
news-image

சர்வதேச சவால்கள் ‘ஏழு’

2024-03-18 12:53:09
news-image

கோட்டா தனக்குத் தானே வெட்டிய குழி

2024-03-18 12:41:45