முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி காமினி செனரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று முதல் தொடர்ந்து தினசரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.மூவரடங்கிய சிறப்பு விசேட நீதிமன்ற நீதிபதி குழாமினால் குறித்த வழக்கை நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ காஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.