‘மகாமுனி’ படத்தின் தொடக்க விழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது.
ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இதில் நடிகர் ஆர்யா, மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், ஜி எம் சுந்தர் , காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கெனவே மௌனகுரு என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர். சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் இயக்கவிருக்கும் படமிது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ். எஸ். தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற சாபு ஜோசப் படத்தை தொகுக்க, ரெம்போன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் தெரிவிக்கையில்,
“க்ரைம் திரில்லர் ஜேனரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம்,ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்.’ என்றார்.
‘மகாமுனி’ படத்தின் தொடக்க விழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இதன் போது படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் இயக்குநா சாந்தகுமார், நாயகன் ஆர்யா, நாயகி இந்துஜா, ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், கலை இயக்குநர் ரெம்போன், எடிட்டர் சாபு ஜோசப் உள்ளிட்ட படக்குழுவினரும், தொழில்நுட்ப கலைஞர்களும் பங்குபற்றினர். இவர்களுடன் தயாரிப்பாளர்கள் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், இயக்குநர்கள் எம் ராஜேஷ், சந்தோஷ் பி ஜெயக்குமார், ஹரிக்குமார், நடிகர் கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலரும் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றி சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM