எல்சல்வடர் நாட்டில் வளர்ப்பு தந்தையால் பாலியல் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட  பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

எல்சல்வடர்  நாட்டை சேர்ந்த கோர்டெஸ் என்ற  இளம்பெண்  அவரது 12 வயது முதல் தனது வளர்ப்பு தந்தையால் பாலியல் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டு வந்ததையடுத்து அவர் கர்ப்பமடைந்தார்.

ஆரம்பத்தில் அவர் அதை அறியவில்லை.பின்னர் கடுமையான இரத்தப்போக்கு மற்றும் வேதனையுடன் துடித்த அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் கருக்கலைப்புக்கு முயன்றதாக சந்தேகம் அடைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இதனையடுத்து அங்கு செள்ற பொலிஸார்  கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கோர்டெஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே ஒரு வாரம் சிகிச்சை பெற்ற அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் தற்போது குறித்த  வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. அப்போது வளர்ப்பு தந்தை குறித்து கோர்டெஸ் கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் பொய் என மறுக்கப்பட்டது. ஆனால் வைத்திய பரிசோதனையில் அனைத்தும் வளர்ப்பு தந்தைக்கு எதிராகவே உள்ளது.

இருந்தாலும் தனது கருவை கலைக்க முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.