ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதும் அமைச்சரவை மீதும் நம்பிக்கையில்லையெனத் தெரிவித்த பிரேரணை ஒன்று பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனமானது அரசியலமைப்புக்கு எதிரானது என்பதால், கடந்த ஒக்டோபர்  26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரேரணையில் கையெப்பமிட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில், ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர்  பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.