மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டார்.

ஜனாதிபதியால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் வடிவேல் சுரேஷ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.