காசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட்  குண்டுவீச்சு

Published By: Digital Desk 4

14 Nov, 2018 | 11:30 AM
image

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா எல்லையிலிருந்து இஸ்ரேல் மீது நேற்று 300 ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. அதில் பல ரொக்கெட் குண்டுகள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தன. ஒரு ஏவுகணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது விழுந்து வெடித்தது.

அதில் பலர் காயமடைந்தனர். குடியிருப்பு பகுதியில் நடந்த ரொக்கெட் தாக்குதலில் 19 வயது வாலிபர் படுகாயம் அடைந்தார்.

இத்தாக்குதலை ‘ஹமாஸ்’ தீவிரவாதிகள் நடத்தியது தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா மீது சரமாரியாக குண்டுவீசி தாக்கியது. விண்ணில் பறந்து சென்ற இஸ்ரேல் போர் விமானங்கள் காஸா மீது பறந்து 70 நிலைகள் மீது குண்டு வீசியது.

இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகிதோடு. 2 பேர் காயம் அடைந்துள்ளனர் என பாலஸ்தீனத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த 2  தீவிரவாதிகள் பலியானதாக மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தாக்குதல் காரணமாக காஸா மற்றும் தென் இஸ்ரேல் பகுதியில் கரும் புகை எழுந்த வண்ணம் உள்ளது. இஸ்ரேல் பகுதியில் வாழும் மக்கள் வெடிகுண்டு பாதுகாப்பு மையங்களில் இருந்து வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட ரொக்கெட் வீச்சில் இஸ்ரேலில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர். அதே போன்று பாலஸ்தீனத்தின் காஸாவிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீடுகள் மற்றும் கட்டிடங்களில் தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52