இளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

13 Nov, 2018 | 08:02 PM
image

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய  இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி பொன்னகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தீபாவளி தினத்தன்று அறிவியல் நகர் பல்லைக்கழக சந்தியிலுள்ள உணவகத்திற்கு சென்று வருவதாகத்தெரிவித்து அவரது உறவினர் அழைத்துச்சென்றநிலையில்; குறித்த இளைஞன் வாகனம் ஒன்றில் பொலனறுவையைச் சேர்ந்தவர்களால் கடத்தப்பட்டு இளைஞரின் உறவினர்களிடம் ஐந்து இலட்சம் ரூபா பணம் தருமாறும் அவரை உயிருடன் விடுவதாக கடத்தல்காரர்கள் தொலைபேசியூடாக அச்சுறுத்தினர். 

இதையடுத்து உறவினர்களால் ஐந்து இலட்சம் ரூபா பணம் கடத்தல்காரர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்து பாதிக்கப்பட்ட இளைஞர் மற்றும் உறவினர்களால் கிளிநொச்சி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணகைளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்புப்பிரிவு பொலிஸார் மேறகொண்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலனறுவையைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டதுடன் கடத்தல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு கைது செய்யபபட்ட இரண்டு  சந்தேக நபர்களையும் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில்  நீதிபதி திரு.ம.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து, குறித்த இரண்டு பேரையும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிட்டார்..

இதேவேளை குறித்த இளைஞரை கடத்துவதற்கு பிரதான சூத்திரதாரியாக இருந்த சந்தேகத்தில்; முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் ஒருவரை இன்று கிளிநொச்சிப் பொலிஸார் கைது செய்து இதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸ் நிலையத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50