காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நக்குல். இவர் தற்போது ராஜ்பாபு இயக்கத்தில் செய் என்ற படத்தில் நடித்திருந்தார். 

அந்த படம் இம்மாதம் 16 ஆம் திகதியன்று வெளியாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிபோயுள்ளது.. இதனால் கடும் மன உளச்சலில் இருந்த நகுல் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி வெளியாகியிருக்கிறது.

தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகும் நடனம் தொடர்பான நிகழ்வு ஒன்றில் நடுவராக பணியாற்ற சம்மதித்திருக்கிறார்.  இது குறித்து அவரிடம் கேட்டபோது,‘ இதற்கு முன் தொலைகாட்சியில் தோன்ற ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஆனால் இந்த போட்டியில் நடுவராக பங்குபற்றுவது எமக்கு பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். எம்முடன் நடன இயக்குநர் பிருந்தாவும் இணைந்திருப்பதால் இந்நிகழ்ச்சியில் பங்குபற்ற சம்மதித்தேன்.’ என்றார்.

நடிகர் கமல்ஹாசன், சூர்யா, விஷால், பிரசன்னா, வரலட்சுமி, ஸ்ருதிஹாசன், இயக்குநர் கரு பழனியப்பன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் சின்னத்திரையில் பணியாற்ற வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.