(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய சுதந்திர முன்னணி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைத்துள்ளது என்று கூறப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப்  புறம்பானது எனத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாச, அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்வரும் தேர்தலில் பொதுவானவொரு சின்னத்தில் மாறுப்பட்ட பெயர் நாமத்தில் போட்டியிடுவதாக மாத்திரமே முன்னணியினர்  ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.