ஜனவரி முதல் யாழில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் அவசியம் !

Published By: Digital Desk 4

13 Nov, 2018 | 01:44 PM
image

யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள்  அடுத்தவருடம் ஜனவரி மாதம் முதல் மீற்றர் பொருத்தி சேவையில் ஈடுபடுவது கட்டாயமாக்கப்படுவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். 

குறித்த விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை அளவீட்டு நியமங்கள் பணியகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய மீற்றர் பொருத்தும் நிறுவனத்தினை தெரிவு செய்து மிக விரைவாக கட்டண மீற்றர் பெருத்துவதை மேற்கொள்வதாக முச்சகரவண்டிகள் சங்கத்தினர் உறுதி அளித்துள்ளனர். 

தேவையற்ற அலங்காரங்கள் கண்ணாடிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அதிக ஒலிகளை முச்சகரவண்டிகளில் பொருத்துவதைத் தவிர்க்குமாறும் யாழ்.மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு விசேட அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் எதிர்காலத்தில் முச்சகரவண்டிச் சாரதிகளுக்கான சீருடை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் முடிவு எடுக்கப்பட்டது. 

யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்த சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்துவது தொடர்பான கலந்துரையாடல்  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் யாழ்.மாநகர சபை முதல்வர் மற்றும் தலைவர்கள் வடமாகாண போக்குவரத்து அதிகார சபை, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதி ஆணையார், மோட்டர் போக்குவரத்துத் திணைக்களம் பரிசோதகர், பெறுப்பதிகாரி நுகர்வோர் அதிகார சபை,  அளவீட்டு நியமனங்கள் பணியகம், யாழ்.மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கம், யாழ்.பிராந்தி கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையம் போன்றோனரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்று இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47