வெள்ளத்தில் அடித்துச்சென்ற யானைகள் நீரோடையில் சடலங்களாக மீட்பு

Published By: R. Kalaichelvan

13 Nov, 2018 | 01:00 PM
image

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணானை சாலம்பன் சேனையில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நான்கு யானைகளின் சடலங்கள் நீரோடையில் காணப்படுவதாக பிரதேச வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இவ் யானைகள் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.யானைக் கூட்டம் வழக்கமாக மேற்குறித்த பிரதேசத்திலுள்ள நீரோடையினை கடந்து அருகிலுள்ள பிரதேசங்களான  புணானை,வாகரை,கிருமிச்சை,ஆலங்குளம் போன்ற கிராமங்களுக்கு செல்வது வழக்கமாகும்.

வெள்ளம் ஏற்பட்ட வேளை யானைகள் சில  இவ் நீரோடையினை கடந்து மறுபக்கம் சென்றுள்ளதாகவும் ஏனைய யானைகள் கடந்து செல்லமுற்ப்பட்ட வேளை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

இதேவேளை மேற்குறித்த யானைகளை காணாது ஏனைய யானைகள் அன்றைய தினம் பிரதேசத்தில் தங்கி நின்று சத்தம் எழுப்பிய நிலையில் தேடும் பணியில் ஈடுபட்டு திரிந்ததாகவும் இது தங்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தனர். 

குறித்த யானைகள் நீரோடையில் விழுந்து அழுகிய நிலையில் காணப்படுவதானால் நீர் மாசுபடுவதுடன் பிரதேசத்தின் சுகாதாரத்திற்கு தீங்காகவுள்ளதாக தெரிவித்தனர்.எனவே சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் அவற்றினை குறித்த இடத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50