இந்திய படகுகளை கரைக்கு கொண்டு வந்துள்ளமையால் தடங்கல் நீங்கியது - கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் சங்கம்

Published By: Vishnu

13 Nov, 2018 | 12:02 PM
image

கிளிநொச்சி, கிராஞ்சி இலவங்குடா கடற்பகுதியில் நிறுத்திவைக்கப்படடிருந்த இந்திய இழுவைப்படகுகளை கரைக்குக் கொண்டு வந்துள்ளமையால் மீன்பிடி நடவடிக்கையினை மேற்கொள்வதிலிருந்த தடங்கல் நீங்கியுள்ளதாக கிராஞ்சி கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கடற்பரப்புக்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட சுமார் 35 இற்கும் மேற்பட்ட இந்திய இழுவைப்படகுகள் நீதிமன்றக் கட்டளைகளுக்கு அமைவாக  இதுவரை காலமும் கிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட கிராஞ்சி, இலங்குடா சிறு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் நிறுத்திவைக்கப்படடிருந்தன.

இதனால் இந்திய இழுவைப்படகுகளிலிருந்து வெளியேறும் எண்ணெய்க்கசிவுகள் மற்றும் படகுகளை நிறுத்திவைத்திருந்தமை காரணமாக சுமார் 59 இற்கும் மேற்பட்ட மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே குறித்த படகுகளை அகற்றி தொழில் செய்யக்கூடிய சூழலை உருவாக்கித்தருமாறு கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதேவேளை பூநகரிப்பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து, சிறுகடற்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மேற்படி இந்திய இழுவைப்படகுகளை கடற்கரையோரத்தில் இழுத்து விடப்பட்டுள்ளது.

இவ்வாறு விடப்பட்டுள்ளதனால் குறித்த கடற்பகுதியில் கடற்தொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடியதாக உள்ளது என்றும் கடற்தொழிலாளர்களும் கிளிநொச்சி கிராஞ்சி கடற்தொழிலாளர் சங்க நிர்வாகமும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21