ஒவ்­வொரு பெண்ணும் திரு­ம­ண­மாகி ஒரு குழந்­தைக்­குத் தா­யா­கும்­போது அக்­கு­ழந்­தை­யைப்­பற்­றியும் அதன் எதிர்­காலம் பற்­றியும் பல்­வேறு கற்­ப­னை­க­ளையும் ஆசை­க­ளையும் வளர்த்­துக் கொள்­கிறாள்.

அந்தக் குழந்தை ஒரு ஆரோக்­கி­ய­சா­லி­யா­கவும் புத்­தி­சா­லி­யா­கவும் வள­ரு­வ­தையே எந்­த­வொரு தாயும் விரும்­பு­கிறாள்.

இவ்­வாறு அக்­கு­ழந்­தையை வளர்த்­தெ­டுப்­பதில் முக்­கிய பங்கு வகிப்­பது அக்­கு­ழந்­தைக்கு தாயா­னவள் கொடுக்கும் உணவு ஆகும்.

எந்தக் குழந்­தைக்கும் முதல் உணவு தாய்ப்பால் ஆகும். இது குழந்­தையின் வளர்ச்­சிக்குத் தேவை­யான சகல போஷ­ணைப்­பொ­ருட்­க­ளையும் சரி­யான அளவில் வழங்கும்.

குழந்­தையின் தேவைக்­கேற்ப தாய்ப்­பாலின் கலவை நாளுக்கு நாள் மாறு­ப­டு­வதால் தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்கும் குழந்­தைகள் நன்கு வளர்­வார்கள்.

முதல்பால்

குழந்தை பிறந்து ஒரு மணித்­தி­யா­லத்­துக்குள் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்­கலாம். பிர­ச­வத்­திற்குப் பின் தொடக்க நாட்கள் சில­வற்றில் சுரக்கும் பால் முதல்பால் ஆகும். இது இலே­சான மஞ்சள் நிற ஒட்டும் தன்­மை­யுள்ள திர­வ­மாகும். இது சகல பிள்­ளை­க­ளுக்கும் கிடைக்க வேண்­டிய உண­வாகும்.

*பிள்­ளை­க­ளுக்­குத் ­தே­வை­யான நோய் எதிர்ப்­புச்­சக்­தியை வழங்கி நோயி­லி­ருந்து பாது­காப்­புப்­பெற முதல் பால் உத­வு­கி­றது.

*பிள்­ளையின் உடல் உறுப்­புக்­களின் விருத்­திக்கு இம்­ மு­தல் பால் உத­வு­கின்­றது.

* பிள்ளை மஞ்சள் நிற­மா­வ­தைத்­த­டுக்க இம்­முதல் பால் உத­வு­கின்­றது.

*ஒவ்­வாமை, அஜீ­ரணம் என்­ப­வற்­றி­லி­ருந்து குழந்­தை­யைப் ­பா­து­காக்கும்.

*கண் நோய்­க­ளி­லி­ருந்து குழந்­தை­யைப்­பா­து­காக்க இம்­மு­தல் பால் உத­வு­கின்­றது.

தாய்ப்பால் கொடுக்­கும்­போது கவ­னிக்க வேண்­டி­யவை பிள்ளை பால் உறிஞ்சும் போது பால் சுரப்பு ஆரம்­ப­மா­கின்­றது.

பால் வெளி­யேறும் அள­வுக்­கேற்ப பால் சுரப்பும் இருக்கும். ஆகையால் அடிக்­கடி குழந்­தைக்­குப் பால் கொடுக்கும் போது பால் சுரப்பு அதி­க­ரிக்கும். இர­விலும் பால் கொடுக்க வேண்டும்.

பால் கொடுக்கும் போது வச­தி­யாக அமர்ந்தோ அல்­லது படுத்தோ ஒரே முலையில் பால் கொடுப்­பதே சிறந்­தது. அடுத்த முறை பால் கொடுக்­கும்­போது மற்­றைய முலையில் பால் கொடுக்­கத் தொ­டங்க வேண்டும்.

*தொடக்­கத்தில் முலை­யி­லி­ருந்து வெளி­யேறும் பாலில் நீர்த்­தன்மை அதி­க­முள்­ளதால் பிள்­ளையின் தாகம் தீர்க்­கப்­படும். பின்­னைய பாலில் கொழுப்பு அதி­க­முள்­ளதால் பிள்ளை நன்கு வளர அது உத­வு­கின்­றது.

(சரி­யான முறையில் பிள்­ளைக்குப் பால் கிடைப்­பதை அது விழுங்கும் முறை­யிலும் சத்­தத்­திலும் கன்­னங்கள் உப்­பு­வ­திலும் அறிந்து கொள்­ளலாம்)

போது­மான அளவு பால் கிடைக்­கும்­போது பிள்­ளைகள் நாளொன்­றுக்கு 6 –- 7 தட­வை­க­ளுக்கு மேல் சிறுநீர் கழிப்பர். நாளொன்­றிற்கு சிறுநீர் கழிக்கும் தட­வை­களை கணக்­கி­டலாம். இதன் மூலம் குழந்­தைக்கு போது­மான தாய்ப்பால் கிடைப்­பதை உறுதி செய்­யலாம்.

*தாய்ப்பால் கொடுக்க முன்னர் தாய் சூடான பான­மொன்றை அருந்­துதல் சிறந்­தது.

வேலைக்­குச்­ செல்லும் தாய்மார் அல்­லது பிள்­ளையை விட்டு வெளியில் செல்ல வேண்டி ஏற்­ப­டும்­போது முலை­யி­லி­ருந்து பாலை எடுத்து அதை கரண்­டி­யாலோ அல்­லது கோப்­பை­யிலோ பிள்­ளைக்குப் பருக்­கலாம்.

எனவே தாய்மார் பாலைக் கறக்கும் முறை பருக்கும் முறை மற்றும் அதை பாத்­தி­ரத்தில் இட்டு குளிர்­சா­தனப் பெட்­டியில் சேமிக்கும் முறை என்­ப­வற்றை அறிந்­தி­ருத்தல் அவ­சியம்.

ஒரு பக்க முலை வெறு­மை­யாகும் வரை அதி­லி­ருந்து பாலை எடுத்து பின் மற்­றைய முலை­யி­லி­ருந்து பாலை எடுக்­கவும். அறை வெப்­ப­நி­லையில் 6 மணித்­தி­யா­லமும் குளிர்­சா­த­னப்­பெட்­டியில் கீழ் தட்டில் 24 மணித்­தி­யா­லமும் பால் பழு­த­டை­யாது பாது­காக்­கலாம்.

தாய் வேலைக்குப் போன பின் வேலை ஸ்தானத்தில் 3 மணித்­தி­யா­லத்­திற்கு ஒரு முறை முலை­யி­லி­ருந்து பாலை வெளி­அ­கற்­று­தவன் மூலம் முலையில் பால் இறுக்­க­ம­டை­வ­தைத்­ த­விர்ப்­ப­துடன் பால் சுரப்­பையும் தொடர்ச்­சி­யாகப் பேணலாம்.

*பிள்­ளைக்­குப் பால் கொடுக்கும் முறை பால் குடித்­தபின் பிள்­ளைக்கு வாயு வெளி­யேற்றல் மற்றும் குழந்­தைக்கு பால் கொடுத்த பின் நித்­தி­ரை­யாக்கும் முறை என்­ப­வற்றை அதற்­கென சிறப்புப் பயிற்சி பெற்ற தாதி­ய­ரிடம் உங்கள் பிர­சவம் நடை­பெற்ற பின் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

*குழந்தை பிறந்து 6மாதம் முடியும் வரை தனித்­தாய்ப்பால் கொடுப்­பது சிறந்­தது. ஆனால் குழந்­தைக்கு தேவை­யான அளவு பால் கிடைக்­காத விடத்து தற்­போது வைத்­திய ஆலோ­ச­னை­யுடன் ஏனைய முறை­களில் (போத்தல்) பாலூட்ட அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­றது.

குழந்­தைக்குத் தேவைப்­படும் ஒவ்­வொரு முறையும் பால் கொடுப்­பது சிறந்­தது. குழந்­தையின் பசியை சைகை மூலம் அறிந்து அது அழும்­வரை காத்­தி­ருக்­காமல் பால் கொடுப்­பது சிறந்­தது.

தாய்ப்பால் கொடுப்­பதால் தாய்க்கு ஏற்­படும் நன்­மைகள்

*தாய்ப்பால் கொடுக்கும் பெண்­க­ளுக்கு மார்­ப­கப்­புற்­றுநோய் சூல­கப்­புற்­றுநோய் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்புக் குறையும்

*பிர­ச­வத்­திற்கு பின் தாயின் உடல் நிறை குறை­வ­டையும்.

*தாய்க்கும் பிள்ளைக்குமான ஒட்டுறவு அதிகரிக்கும். தாய்க்கும் உளரீதியான ஆறுதல் கிடைக்கும்.எனவே நேயர்களே... பிரசவமானது சுகப்பிரசவமோ அல்லது சிசேரியன் பிரசவமோ எதுவாயினும் அதன் பின் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் முக்கியம் பிரசவத்தின் பின் குழந்தைக்குப் பால் கொடுப்பது தொடர்பான அறிவுரைகளை அதற்கென சிறப்புப் பயிற்சி பெற்ற தாதியரிடம் மற்றும் சுகாதார சேவை உத்தியோகத்தரிடம் கேட்டு தெரிந்து கொள்வது சிறந்தது.