வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்

Published By: Rajeeban

13 Nov, 2018 | 08:35 AM
image

இலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி சிறிசேன கலைத்ததற்கான தங்கள் எதிர்ப்பை வெளியிடும் வகையில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சரத் அமுனுகமவுடனான சந்திப்பை  எட்டு மேற்குலக நாடுகள் புறக்கணித்துள்ளன.

வெளிவிவகார அமைச்சர் சரத்அமுனுக சந்திப்பொன்றிற்காக 43 நாடுகளின் பிரதிநிதிகளிற்கு அழைப்பை விடுத்திருந்த போதிலும் மிக்குறைந்த அளவு வெளிநாட்டு இராஜதந்திரிகளே இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

பிரிட்டன் பிரான்ஸ் நெதர்லாந்து நோர்வே அவுஸ்திரேலிய கனடா தென்ஆபிரிக்கா இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இன்றைய சந்திப்பை புறக்கணித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா ஜேர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை சீனா பாக்கிஸ்தான் கியுபா உட்பட 20 நாடுகளின் பிரதிநிதிகள் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்தும்  அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகள் குறித்தும் மேற்குலக நாடுகள் கடும் அதிருப்தி வெளியிட்டுவந்துள்ள நிலையிலேயே இன்றைய சந்திப்பை அவர்கள் புறக்கணித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21