தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்

Published By: Rajeeban

13 Nov, 2018 | 09:49 AM
image

தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும்  அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அலுவலகம் இன்று இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் சிறிசேனவின் கருத்தினை நிராகரித்துள்ளது.

சபாநாயகர் கருஜெயசூரியவை கட்சிதலைவர்கள் சந்தித்தவேளை  எவரும் இது குறித்து தெரிவிக்கவில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரத்தக்களறியேற்படும் ஆபத்துள்ளது என அவர்கள் கருதியிருந்தால் சபாநாயகரை சந்தித்தவேளை இது குறித்து  அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வன்முறைகள் நிகழும் சூழ்நிலை காணப்பட்டிருந்தால் அது தொடர்பில் நடவடிக்கையெடுக்கவேண்டியது சபாநாயகரே என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க எனினும்  ஜனாதிபதி தன்னிச்சையாக செயற்பட்டு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பாராளுமன்றத்தை கலைத்தார் என சிறினே குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் அவர்களிற்கான விலைகள் குறித்து  சிறிசேனவிற்கே தெரிந்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க சிறிசேனவின் கட்சியே ஐக்கியதேசிய கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அவர்களிற்கு அமைச்சு பதவிகளை வழங்கியது எனவும் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக மக்கள் தங்கள் பிரதிநிதிகளின் மீதும் பாராளுமன்றத்தின் மீதும் நம்பிக்கை இழந்தார்கள்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களிடமிருந்து பெற்ற ஆணையை மதிப்பதற்காக நான் கடந்த மூன்றரை வருடங்கள் மிகவும் பொறுமையாகயிருந்தேன் என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க நான் அவமானங்களையும் ஏளனங்களையும் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டேன் எனினும் நான் பொறுமையாகயிருந்தன் காரணமாகவே மூன்றரை வருடங்கள் இந்த அரசாங்கத்தை தொடரமுடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

நான் எனது தனிப்பட்ட நலன்களை அரசியல் நலன்களில் இருந்து பிரித்துப்பார்த்தே வந்துள்ளேன் எனவும் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும்  அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் சபாநாயகர் பாராளுமன்றத்தின் பாரம்பரியத்தை பின்பற்றினார் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20