சுவிட்சர்லாந்து நாட்டில் இளைஞர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற பாலியல் தொழிலாளிகளை பொலிஸார்   கைது செய்துள்ளனர்.

சுவிஸின் பேசல் நகரில் பாலியல் தொழில் புரியும் மையமொன்றை சேர்ந்த  3 பாலியல் தொழிலாளிகள் சில தினங்களுக்கு முன்னர் வெளியே சென்று சாலையில் நின்றவாறு இளைஞர்களை தம்வசம்  மயக்கி அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, மூவரும் மீதும் மோகம் கொண்ட 5 வாலிபர்கள் அவர்களுடன் சென்றுள்ளனர்.

பாலியல் மையத்திற்கு சென்றவுடன், ‘உங்களது விருப்பம் நிறைவேற வேண்டும் என்றால், நாங்கள் கேட்கும் பணத்தை தரவேண்டும். இல்லையெனில், நீங்கள் இங்கே வந்ததை உங்கள் உறவினர்களுடன் தெரிவித்து விடுவோம்’ எனக் கூறி மிரட்டியுள்ளனர்.

ஆனால், 3 பெண்கள் கேட்ட பணம் வாலிபர்களிடம் இல்லை எனவே வெளியே சென்று பணம் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.இதனை ஏற்றுக்கொண்ட மூவரும் இளைஞர்களிடமிருந்து விலை உயர்ந்த கை கடிகாரம், வீட்டு திறப்பு உள்ளிட்டவைகளை அடமானமாக வாங்கியதோடு இளைஞர் ஒருவரிடம் ’15,000 பிராங்க் தரவேண்டும்’ என மிரட்டி உறுதிப்பத்திரமும் கையெழுத்திட்டு வாங்கி வைத்துள்ளனர்.

வெளியே வந்த 5 பேரும் தலா 2,000 பிராங்க் பணம் ஏற்பாடு செய்ய முடியாததால், உடனடியாக பொலிஸாரிடம் புகார் கூறியுள்ளனர்.விரைந்து வந்த பொலிஸார் இளைஞர்களை மிரட்டிய பாலியல் தொழிலாளிகள் மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த இளைஞர்களின் பொருட்களை மீட்டனர்.

இருவரிடமும் நடத்திய விசாரணையில் ‘இருவர் 29 மற்றும் 34 வயதுடைய நைஜீரியா நாட்டு பெண்கள் என்றும் மற்றவர் 54 வயதான பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

எனினும், இப்பாலியல் பெண்களால் பலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்துள்ள பொலிஸார் சிறையில் அடைத்து விசாரணை செய்து வருகின்றனர்.