புதிய மூன்று விமான சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒக்டோபர், நவம்பர் 2018 காலப்பகுதியில் இலங்கை சுற்றுலாத்துறை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றது. 

இதன் மூலம் ஆசியாவினூடாக இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் மூலம் சுற்றுலாத்துறைக்கு உந்துதலான சக்தி ஏற்பட்டுள்ளது.

TUI போலண்ட், எடில்வீஸ் மற்றும் ஏரோபுளோட், ரஷ்யன் விமான சேவை ஆகிய சேவைகள் ஏற்கனவே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

அவற்றிற்கு வரவேற்பு வழங்கப்பட்டதுடன் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் கவர்ச்சிகரமான வண்ணமிகு கலாசார நடனக் குழுவினரின் வரவேற்பை வழங்கியதுடன் சிறப்பான செயல்பாட்டையும் மேற்கொண்டது.

TUI போலண்ட் தனது இருப்பை மேம்படுத்துகின்றது  

TUI  குழுமத்தை சேர்ந்த TUI  போலண்ட் விமான சேவை உலகின் முன்னணி சுற்றுலா நிறுவனமாக செயல்படுவதுடன் சுற்றுப்பயண வழிகாட்டியாகவும் திகழ்கின்றது.

இந்த நிறுவனம் ஆறு விமான சேவைகளை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் 150 இற்கும் மேற்பட்ட விமானங்களை கொண்டுள்ளது.

190 பயணிகளுடன் இந்த நிறுவனத்தின் விமானம் நவம்பர் மாதம் 7ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது. 

இவர்களுக்கான நடவடிக்கைகள் இலங்கையின் முன்னணி பயண மற்றும் ஓய்வு வழங்கல் நிறுவனமான எயிட்கன் ஸ்பென்ஸ் இனால் ஏற்பாடு செய்யப்பட்டது.

போலண்டில் இருந்து இந்த பருவ காலத்தில் 13 ஓழுங்கு செய்யப்பட்ட விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளன. 

2019 ஆம் ஆண்டு மார்ச் மாத நடுப்பகுதி வரை ஒவ்வொரு 11 நாட்களுக்கும் ஒவ்வொரு விமானம் வரவுள்ளதாக எயிற்கன் ஸ்பென்ஸ் தெரிவித்துள்ளது.

TUI  போலண்ட் விமான சேவையின் அட்டவணைக்கு அமைய குளிர் காலத்தில் மாதந்தரம் 2–3 சேவைகளை போலண்ட்டில் இருந்து நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை TUI  UK  விமான சேவையும் விமான நிலையத்திற்கு 300 பயணிகளைக் கொண்ட குழுவுடன் வருகை தரவுள்ளது.

இதன் மூலம் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கின்றது. TUI  UK   விமான சேவை லண்டனில் இருந்து நவம்பர் –ஏப்பிரல் காலப்பகுதியினில் வாரத்திற்கு ஒரு முறை என்ற அடிப்படையில் மாதம் ஒன்றிற்கு 4 சேவைகளை மேற்கொள்கின்றது.

எடில்விஸ் (Edelweiss)) விமான சேவை சூரிச்சில் இருந்து கொழும்பிற்கான நேரடி சேவையினை விஸ்தரிக்கின்றது. மேலும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக சுவிஸ்சலாந்தின் விடுமுறையாளர்களுக்கான முன்னணி விமான சேவை தமது சேவை வலைப்பின்னலை ஆசிய நாடுகளுடன் விஸ்தரிக்கப்படும் நிலையில் இந்த மாதத்தில் சூரிச் மற்றும் கொழும்புடனான நேரடி சேவையினை விஸ்தரிக்கின்றது. 

முதலாவது சேவையாக A 340-300 ரக விமானம் 4ஆம் திகதி நொவம்பர் மாதம் 2018 அன்று 314 பயணிகளுடன் வருகை தந்தது. இரண்டாவது சேவை சனிக்கிழமை 10 நொவம்பர் மாதம் வருகை தரவுள்ளது. இவர்களுக்கான தரை சேவை நடவடிக்கைகள் பவர் அன்ட் கொம்பனி தனியார் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த சேவைகள் குளிர் காலத்தில் நொவம்பர் முதல் மே மாதம் வரையிலும் பின்னர் அடுத்த வருடம் ஒக்டோபர் முதல் நொவம்பர் மாதம் வரையிலும் மேற்கொள்ளப்படும். 314 பயணிகளுடனான எயார் பஸ் A340–300 ரக விமானம் இந்த வழியில் ஈடுபடுத்தப்படவுள்ளது. தற்போது வாரந்தரம் இரண்டு சேவைகள் சூரிச்சில் இருந்து கொழும்பிற்கு எதிர்வரும் 5 மே வரை மேற்கொள்ள திட்ட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்த சேவையினை பெரும்பாலும் மேலும் தொடர திட்டமிடப்பட்டுள்ளது. வருடாந்தரம் 1.8 மில்லியன் பயணிகள் தமது விடுமுறை இலக்கை நோக்கி எடில்விஸ் விமான சேவையினை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அவர்கள் தமது ஓய்வான பயணத்தை அனுபவிக்கின்றனர்.

ஏரோபுளோட்  (Aeroflot) ரஷ்ய விமான சேவை இலங்கையுடனான தமது சேவைகளை மீள ஆரம்பிக்கின்றனர்கள் ரஷ்ய ஏரோபுளோட்  SU 287 ரக விமானம் 29ஆம் திகதி ஒக்டோம் மாதம் 2018ஆம் ஆண்டு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வந்து இறங்கியது.

இதன்மூலம் ஒரு தசாப்த காலத்தின் பின்னர் கொழும்பு மற்றும் மொஸ்கோவிற்கு இடையேயான நேரடி சேவையை ஆரம்பிப்பதற்கான ஏதுநிலை சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் விமானநிலைய விமானசேவை மற்றும் மாலைதீவு விமான சேவை அதிகாரிகள் மொஸ்கோ விமானத்தை வரவேற்றனர்..

ஏரோபுளோட் ஏயார்பஸ் A 330 ரக விமானம் மூலம் கொழும்பு மற்றும் மொஸ்கோவிற்கு இடையேயான ஐந்து நேரடி சேவைகளைரூபவ் புதன் கிழமைகள் மற்றும் வியாழக்கிழமைகள் தவிர்ந்த ஏனைய நாட்களில் மேற்கொள்ளவுள்ளது. இதன்மூலம் ரஷ்யா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையேயான தொடர்பு மேலும் நன்கு பரிணமிப்பதுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான சுற்றுலா பயணிகளின் போக்குவரத்தும் மேம்படவுள்ளது. இதன்மூலம் இரு நாடுகளின் சுற்றுலா தொழிற்துறை அதிக அளவில் அபிவிருத்தி அடைவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்ய கூட்டமைப்பு நிர்வாகத்தில் பாரிய விமானசேவையான ரஷ்ய விமானசேவை திகழ்கிறது. உலகலாவிய ரீதியாக இந்த சேவை 4வது பழமைவாய்ந்த விமானசேவை கடந்த 1923ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமது போக்குவரத்து பணிகளை ஆரம்பித்தது. இதன்மூலம் இந்த விமானசேவை சர்வதேச விமானசேவை குழாமின் முக்கிய அங்கத்துவத்தை பெற்றது. 243 விமானங்களை கொண்ட இந்த சேவை உள்ளுர் மற்றும் சர்வதேச 130 இலக்குகளுக்கு செல்கிறது.

2018 ஒக்டோபர் இன்று வரையிலான காலப்பகுதியினில் 1.88 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 10.65 அதிகரிப்பாகும். இலங்கையில் நிலவும் தற்போதைய நிலையிலும் இந்த காலப்பகுதியினில் முன்கூட்டிய விமான சேவை பதிவுகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதனை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம்  தெரிவிப்பதில் பெருமைப்படுகின்றது. இதன் மூலம் இலங்கைக்கு வருகை தரும் பட்டய விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு நோக்கத்தக்கதாக திகழ்கின்றது.