காஸா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கையில் ஹமாஸ் அமைப்பின் உள்ளுர் தளபதியொருவர் உட்பட ஆறு பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் இதனை உறுதி செய்துள்ளதுடன் தனது விசேட படைப்பிரிவொன்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் இதன் போது தனது படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கான் யூனிஸ் என்ற பகுதியில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

ஹமாஸ் அமைப்பு இந்த தாக்குதலை கோழைத்தனமானது என வர்ணித்துள்ளது.

காஸா பள்ளத்தாக்கிற்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரிற்குள்ளிலிருந்து  இஸ்ரேலிய விசேட படைப்பிரிவினர் தாக்குதலை மேற்கொண்டனர் என ஹமாஸ் தெரிவித்துள்ளது

இதன் பின்னர் இஸ்ரேல் விமானதாக்குதல்களையும் டாங்கிகளையும் பயன்படுத்தியுள்ளது.

ஹமாஸ் உறுப்பினரை கடத்தும் நோக்கத்துடனேயே இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன

கொல்லப்பட்டுள்ள ஹமாஸ் தளபதி நூர்டின் முகமட் சல்மா பராகே ஹமாஸின் சுரங்கப்பாதைகள் திட்டத்தில் முக்கிய பங்களிப்பு செய்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன