பாகிஸ்தானில், தேசிய தினத்தை முன்னிட்டு நாளை ஒரு நாள் கையடக்கத்தொலைபேசி சேவைகள் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தேசிய தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தலைநகர் இஸ்லாமாபாத்தில் தேசிய தின கொண்டாட்டங்கள் மிகப் பிரமாண்ட அளவில் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்ச்சிகளின் போது, பாகிஸ்தான் ஆயுதப்படையின் பிரமாண்ட அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்ற போது தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட முயற்சி செய்யலாம் என்ற தகவல் வெளியானது. இதனால், பாதுகாப்பு காரணம் கருதி இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் கையடக்கத்தொலைபேசி சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதேபோன்று, தேசிய விழா நடைபெறும் நாளை கையடக்கத்தொலைபேசி சேவைகள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படும் என பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.