பங்களாதேசத்திற்கு எதிராக இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா அணி  3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை முடிவு செய்தது.பங்களாதேஷ்  20 ஓவர் முடிவில்  5 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்கள் எடுத்தது.

கடைசியில் களமிறங்கிய மஹ்மதுல்லா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்து அணிக்கு  156 ஓட்டங்கள் பெற வழிவகுத்தார்.

157 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 18.3 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.