பாராளுமன்ற திடீர் கலைப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு !

Published By: Vishnu

11 Nov, 2018 | 10:14 AM
image

நாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னாள் ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன்  இந்த வழக்குத்தாக்கல் செய்யப்படுமெனவும்  கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

'அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

மேலும் நாட்டின் மீயுயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2  வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தைகேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது' என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

'எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை.

இவ்வாறான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாங்கள் அனுமதித்தோமேயானால் எதிர் காலத்திலும் ஜனாதிபதி 

பாராளுமன்றத்தை தமது விருப்பத்திற்கேற்ப எந்த வேளையிலும் கலைக்க முடியும் என்ற நிலை வந்து விடும். 

எனவே இவ்வாறன செயற்பாடுகள் எதிர்காலத்திலும் இடம்பெறாமல் இருப்பதற்காகவே நாங்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளோம்' என்று அவர் கூறினார்.

அத்துடன் நாங்கள் நீதிமன்றம் செல்வது மட்டுமின்றி இவ்வாறான தொடர்ச்சியான ஜனநாயக விரோத செயற்பாடுகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31